நேபாளத்தில் வனப்பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 68 பேரின் உடல்கள் மீட்பு.
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர்.
72 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க சில நிமிடங்களில் இருந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விமானம் விழுந்தது மலை பிரதேசம் என்பதால் கடுமையாக புகைமண்டலம் எழுந்தது.
இதன் காரணமாக மீட்பு குழுவினரால் மீட்பு பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. நேபாளத்தை சேர்ந்த 53 பேர் மற்றும் வெளிநாட்டவர்கள் 15 பேர் பயணம் செய்தனர். அதில் ஐந்து பேர் இந்திய பயணிகளும் ரஷ்யாவை சேர்ந்த நான்கு பயணிகளும், தென்கொரியாவில் சேர்ந்த இரண்டு பயணிகளும், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்களும் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தை தொடர்ந்து நேபாள அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மேலும் விபத்து காரணமாக பொக்கரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…