சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைப்பு! கடைசி நேரத்தில் வந்த திடீர் சிக்கல்?
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள். அங்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றவர்கள், அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டடு 9 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு தான் சிக்கியிருக்கிறார்கள்.
நாசா உடன் இணைந்த ஸ்பேஸ்எக்ஸ்
அங்கு சிக்கி இருந்த இவர்களை மீட்க நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து நாளை க்ரூ டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருந்தது.
க்ரூ டிராகன் விண்கலமானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை திட்டமிடப்பட்டிருந்த சூழலில் தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக, இந்த ஏவுதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏன் தாமதம்?
க்ரூ டிராகன் ராக்கெட் ஏவுதளத்தில் (Launch Pad) உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் நாசாவும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் மும்மரமாக வேலை செய்து வருகிறது. இந்த கோளாறு சரிசெய்யப்பட்டது என்றால் இந்திய நேரப்படி நாளை (மார்ச் 14) அதிகாலை 4:56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த நாசா திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்களை வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இன்று காலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த சூழலில் நேரம் கடந்துவிட்ட காரணத்தால் இந்த திட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், Crew-10 மிஷன் வெற்றிகரமாக நடந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.