டிரம்ப்பை சுட்ட நபர்…நொடியில் சுட்டுக் கொன்ற ஸ்னைப்பர்..வைரலாகும் வீடியோ!!

Donald Trump

டொனால்ட் டிரம்ப் : நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் டொனால்ட் டிரம்ப் இன்று பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்தார்.

தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், அந்த மர்ம நபர் நோட்டமிட்டு பேரணி நடைபெறும் இடத்திற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பே பேரணியில் இருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர்ஸ் கையில் துப்பாக்கியுடன் பார்த்துவிட்டனர். பின், அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திய அடுத்த சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் நபரை சுட்டுக்கொலை செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், (FBI) கொடுத்த தகவலின் படி, டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவருக்கு 20 வயது என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்