இந்தியாவுக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் – வெளியுறவுத்துறை செயலாளர்
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது.
மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு துறையின் புதிய செயலாளராக ஜெயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் என்று கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிடம் இருந்து ஏராளமான உதவிகளை பெற்று வருவதாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என தெரிவித்துள்ளார்.