டெல்லி சம்பவத்தை போல பங்களாதேஷில் நடந்த கொடூரம்.! காதலியின் தலையை துண்டாக வெட்டி அகற்றிய காதலன்.!
டெல்லி சம்பவத்தை போல, பங்களாதேஷில் காதலி தலை, கையை துண்டு துண்டாக வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். காதலி உடல் பாகங்களையும் கண்டறிந்தனர்.
சமீபத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம் பெண் தன்னுடைய காதலன் ஆஃப்தாப்பால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். அதன் பயங்கரம் இன்னும் குரையாத நிலையில் அதே போல ஒரு சம்பவம் அண்டை நாடான பங்களாதேஷில் நடந்துள்ளது.
போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த அபுபக்கர் என்பவர் தனது காதலி கவிதா ராணியை கொன்று துண்டு துண்டாக வெட்டி தலை, கை பகுதிகளை அப்புறப்படுத்திய சம்பவம் பங்களாதேஷில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபு பக்கரும் சப்னா எனும் பெண்ணும் பங்களாதேஷ், கோபர்சகா சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். அதே போல, சமீபத்தில், அபுபக்கர், உயிரிழந்த கவிதாவுடன் நெருக்கமாகி வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 5ஆம் தேதி, சப்னா வேலைக்கு சென்ற சமயம் கவிதாவை அபுபக்கர் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் அபு பக்ர், கவிதாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டான்.
பின்னர், கவிதா உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளான். இதில் கையை மட்டும் அருகில் உள்ள வாய்க்காலில் கொண்டு சென்று போட்டு அப்புறப்படுத்தியுள்ளான். பின்னர், தலையை ஒரு பாலிதீன் பையில் எடுத்து தனது காதலி சப்னா உடன் தப்பியோடிவிட்டான்.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி, அபு பக்கர் வேலைக்கு வரவில்லை. அவனை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. உடன் வேலை செய்யும் வேலையாட்கள் வந்து பார்த்த போது வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது. அபுபக்கர் காணாமல் போனதில் சந்தேகம் அதிகரித்ததால், வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸார் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, பெட்டியில் தலையில்லாத பெண் சடலம் கிடந்தது. அவளது தலை தனித்தனியாக வெட்டப்பட்ட, பாலிதீனில் சுற்றப்பட்டு இருந்தது. கைகள் காணவில்லை. பலியானவர் கலிபாட் பச்சரின் மகள் கவிதா ராணி என அடையாளம் காணப்பட்டார்.
அதன் பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், நவம்பர் 7 ஆம் தேதி, அபு பக்கரை அவரது காதலி சப்னாவுடன் போலீசார் கைது செய்தனர். போலீசார் குற்றவாளிகளை சோனாடங்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பின்னனர் காவல் துறை விசாரணையில், அபுபக்கர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நகரின் கோபர்சகா பகுதியில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் இருந்து பாலித்தீன் சுற்றப்பட்ட கவிதாவின் துண்டிக்கப்பட்ட கைகளை RAB சிறப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டெடுத்தனர்.