பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்ட நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்.!
மக்களை இம்ரான் கான் தவறான பாதையில் நடத்துவதால் துப்பாக்கி சூடு நடத்தினேன் – என கைது செய்யப்பட்ட முகமது பஷீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக நேற்று பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தி இருந்தார். அப்படிதான் நேற்றைய பேரணியும் நடந்தது. அப்போது தான் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் காயமடைந்துள்ளதுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இம்ரான் கானுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக முகமது பஷீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னோர் நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முகமது பஷீர்,’ மக்களை இம்ரான் கான் தவறான பாதையில் நடத்துவதால் துப்பாக்கி சூடு நடத்தினேன் .’ என வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .