டைனோசர் காலத்து மிகப்பெரிய முதலை பிரேசிலில் கண்டுபிடிப்பு.!
டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு முதலை இனம் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியலாளர்கள் பிரேசிலில் மிகப்பெரிய முதலை இனத்தின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். முதலில் இந்த படிமத்தின் அளவு மற்றும் அமைப்பைப் பொறுத்து இது டைனோசர் இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
பிறகு இந்த எலும்புக்கூட்டின் தலையை, வைத்து முதலை என கண்டறிந்தனர். சுமார் 72 மற்றும் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைட்டானோசர் எனும் டைனோசர்களுடன் இணைந்து வாழ்ந்த ஒரு மாபெரும் முதலைகளின் முன்னோர் இனம் என்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.
டைட்டனோ சம்ப்சா ஐயோரி என பெயரிடப்பட்ட இந்த முதலை இனங்கள் 3மீ முதல் 6மீ வரை நீளமானது மற்றும் இதன் ஒரு கடி மிகவும் வலிமையானது என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இந்த முதலைகள் வறண்ட அல்லது அரை வறண்ட சூழலில் வசிக்கும் தன்மையுடையது. அரை நீர்வாழ் உயிரினங்கள் வகையைச் சேர்ந்ததாக இருந்திருக்கலாம்,என்று ஆய்வுகள் கூறியது.