இம்ரான்கான் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை.!
இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்த போது சிறப்பு ரேஞ்சர் படையினர் அதிரடியாய் அவரை கைது செய்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனை அடுத்து நேற்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரான்கானை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. இம்ரான்கான் நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான்கான் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அவர் மீது, கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கு பதியப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.