“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

ரயிலில் இருந்து 185 பேர் வெளியே வந்தபோது அவர்களில் ஆட்களை தேர்வு செய்து சுட்டுக்கொலை செய்தனர் என பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தப்பித்த நபர் கூறியுள்ளார்.

train hijack pakistan

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரயிலை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கடத்தி சென்ற அந்த பயணிகளில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, இதுவரை 190 பயணிகள் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 30 BLA கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்றுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி பதட்டத்திற்கு மேல் பதட்டத்ததை கொடுத்தது.

இப்படியான பதட்டமான சூழலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என கேள்விகள் எழும்பிய சூழலில், இந்த கடத்தல் சம்பவத்தில், பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது எனவும், இந்த சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் துன்யா நியூஸ் டிவியிடம் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் சம்பவம் முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த சம்பவத்தின் போது அங்கு சிக்கியிருந்தவர்கள் தப்பித்தபிறகு செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்கும்போதே இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பதை நினைத்து நடுங்க வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து தப்பியோடிய நபர் ஒருவர் பேசிய  விவரம் பற்றி பார்ப்போம்…

இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்த நவீத் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ” முதலில் ரயிலை கடத்திய பிறகு அவர்கள் எங்களை ஒரு ஒருவராக கீழே இறங்கும்படி சொன்னார்கள். ஆனால், பயத்தில் நாங்கள் கீழே இறங்கவில்லை…உடனடியாக அவர்கள் உள்ளே வந்து எங்களை நோக்கி சுட தொடங்கினார்கள். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பிறகு நீங்கள் அனைவரும் கீழே இறங்கினால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பேசி கீழே இறங்க வைத்தார்கள். 180 பேர் கீழே இறங்கியவுடன் அதில் பெண்கள் தனியாகவும், குழந்தைகள் தனியாகவும், பெரியவர்களை தனியாகவும் பிரித்து போக சொன்னார்கள். அதன் பிறகு அதில் யார் யாரெல்லாம் சுடலாம் என தேர்வு செய்து சுட்டுக்கொலை செய்தார்கள். சில பெண்கள் வேண்டாம் விட்டுடுங்க என கெஞ்சினார்கள் அவர்கள் கேட்கவில்லை சம்பவம் நடந்தபோது பலரும் தப்பி ஓடினாம் நான் ஓடும்போதும் என்னுடன் பல பேர் ஓடினார்கள்” எனவும் பயத்துடன் அந்த நபர் பேட்டி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai