பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தற்போது புதியதாக 17 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது பொருளாதாரத்தில் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பொருளாதார பணவீக்கமானது ஏற்பட்டு உள்ளது. இந்த பணவீக்க அளவானது கடந்த 48 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது என பொருளாதார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .
கூடுதல் வரிகள் : இந்த பணவீக்கம் காரணமாக, பாகிஸ்தானில் அடிப்படை வசதிகள் கூட விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் மோசமான பொருளாதார சிக்கலில் ஈடுபட்டுள்ளனர். இதனை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் கூடுதல் வரிகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.
17 ஆயிரம் கோடி : இதன் படி, புதியதாக 17 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு பல்வேறு செயல்பாடுகளுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு மேலும் பொருளாதர நெருக்கடி ஏற்படும் என்கிறது வல்லுநர் குழு.
சூழ்நிலை : இருந்தும் தற்போதைக்கு பாகிஸ்தான் அரசுக்கு வேறு வழியில்லை. இப்படி வரிகளை பெருகினால் தான் அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி சர்வதேச கடனை பெற முடியும். அதன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பாகிஸ்தான் அரசு முயற்சி செய்யும்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…