ஐநா தலைமையகத்தில் திறக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் முதல் மார்பளவு சிலை.!
ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் தோ’ என்ற பஜனை வாசிக்கப்பட்டது.
இந்தியாவால் பரிசாகக் கொடுக்கப்பட்ட இந்த மகாத்மா காந்தியின் சிலை ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு புல்வெளி தோட்டத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள காந்தியின் முதல் சிற்பமாகும். மேலும் இந்த சிலையை, இந்தியாவின் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கிய ராம் வஞ்சி சுதார் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திறப்பு விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், 77வது ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி மற்றும் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி தூதர் ருசிரா காம்போஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
#WATCH | EAM Dr S Jaishankar and UN Secretary-General António Guterres unveil the bust of Mahatma Gandhi at the United Nations Headquarters in New York pic.twitter.com/CmgwB9lf43
— ANI (@ANI) December 14, 2022