மன்னர் சார்லஸ் உருவப்படம் இடம்பெற்ற முதல் நோட்டுகள்! வெளியீடு.!
இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் படம் இடம்பெற்ற முதல் நோட்டுகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் கடந்த செப்டம்பரில் ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அதன் பிறகு மன்னர் சார்லஸின் படம் இடம்பெற்ற பண நோட்டுகள், இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் பாதியில் இந்த பண நோட்டுகள் மக்களிடையே உபயோகத்திற்கு வர இருக்கிறது.
அவரது உருவம் பொறித்த நாணயங்கள் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்கனவே மக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டதாக ராயல் மின்ட் தெரிவித்தது. தற்போதுள்ள பண நோட்டுகளின் (£5, £10, £20 மற்றும் £50) வடிவமைப்புகளில் மன்னரின் உருவப்படம் இடம்பெறும், மேற்கொண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பண நோட்டுகளின் இந்த வடிவமைப்பு, சில வாரங்களுக்கு முன் மன்னரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மேலும் 2023 ஆம் ஆண்டின் பிற்பாதியில் இருந்து தயாரிக்கப்படும் என்றும் 2024 ஆம் ஆண்டில் மக்கள் உபயோகத்திற்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.