இந்த கொடிய மீனை சாப்பிட்டதால் 83 வயது மூதாட்டிக்கு நடந்த விபரீதம்.!
மலேசியாவில் 83 வயது மூதாட்டி ஒருவர் பஃபர் என்ற விஷ மீனைச் சாப்பிட்டதால் உயிரிழப்பு.
மலேசியாவின் ஜோகூரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதினர், வழக்கமாக சாப்பிட்டு வந்த பஃபர் என்ற மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆனால், அதில் விஷம் இருப்பது தெரியாமல் அந்த மீனை சாப்பிட்டதால், மார்ச் 25 அன்று அந்த தம்பதியினரின் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில், அவரது மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவம் குறித்து தம்பதியரின் மகள் Ng Ai Lee கூறுகையில், தனது தந்தை பஃபர் மீனை உள்ளூர் கடையில் இருந்து வாங்கியதாக கூறினார். என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் சந்தையில் மீன் வாங்குகி உண்டு வருகிறார்கள். ஆனால், என் தந்தை அந்த மீனின் விஷம் குறித்து இருமுறை யோசிக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
எப்படி அறிகுறிகள் தென்பட்டது என்பது குறித்து தம்பதியரின் மகள் Ng Ai Lee பேசுகையில், மதிய உணவிற்காக அந்த மீனைச் சுத்தம் செய்து சமைத்த சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, தனது தாயார் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். பின்னர், தனது தந்தைக்கும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இதே போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கியது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என கூறினார்.
பின்னர், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்று மாலை அவரது தாயார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இறப்புக்கான காரணம், “நரம்பியல் வெளிப்பாட்டுடன் கூடிய உணவு நச்சுத்தன்மை” என்று மருத்துவர்கள் தரப்பில்விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.