குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் சடலங்கள்கொச்சிக்கு வருகிறது!
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பரிதாபமாக உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது.
குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவனமானயில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பெரும், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இதில் பலியான 45 இந்தியர்களின் சடலங்களையும் விமான படையினரின் போர் விமானம் மூலம் கொச்சிக்கு காலை 10.30 மணிக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் கொச்சிக்கு வந்தடைந்த உடல்களை ஆம்புலன்ஸ்ஸின் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு முன்னேறப்பாடாக கொச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இதர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கொச்சி வந்தடையும் 7 தமிழர்களின் உடல்களை, உடனடியாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A special IAF aircraft carrying mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait has taken off for Kochi.
MoS @KVSinghMPGonda, who coordinated with Kuwaiti authorities ensuring swift repatriation, is onboard the aircraft pic.twitter.com/PEmBfy4wj2
— India in Kuwait (@indembkwt) June 14, 2024