3.2 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை 44வது மாடியில் பார்க் செய்த சீன கோடீஸ்வரர்..!
சீன கோடீஸ்வரர் ஒருவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை 44 வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார்.
சீனாவின் புஜியான் மாகாணத்திம் ஜியாமென் நகரில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவர் தான் வாங்கிய ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரை, தான் வசிக்கும் பென்ட்ஹவுஸின் 44 வது மாடியின் பால்கனியில் கொண்டு சென்று பார்க்கிங் செய்துள்ளார்.
அதன்படி, சுமார் 170 மீட்டர் உயரத்திற்கு உள்ளூர் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உதவியுடன், மூன்று எஃகு கேபிள்களுடன் இணைக்கப்பட்ட இரும்புக் கூண்டைப் பயன்படுத்தி கார் பத்திரமாக நிறுத்தப்பட்டது.
இதனை முழுமையாக முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனதாக கட்டுமான நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர். இவர் செய்த இந்த செயலை சிலர் பாராட்டினர். ஆனால், மற்றவர்கள் இதுபோன்ற ஆடம்பரமான செயல்பாட்டில் பணத்தை வீணடிக்கும் இவரின் செயலை விமர்சித்தனர்.
கோடீஸ்வரரின் பெயர் உள்ளிட்ட அடையாளம் தெரியவில்லை. ஆனால், மெய்துவான் டியான்பிங் உணவு விநியோக நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யோங் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
View this post on Instagram