ஜாலியாக குளித்து கொண்டிருந்த சிறுவர்கள்…திடீரென வந்த நீர் யானை…வைரலாகும் வீடியோ.!!

Hippo

கடலில் மற்றும் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளில் சுறா, முதலை,  உள்ளிட்ட விலங்குகள் மிகவும் ஆபத்தானது என்று நாம் அனைவர்க்கும் தெரியும். இந்த விலங்குகள் தண்ணீர் குள் வருவதை நாம் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் நீர் யானை வந்தால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது.

ஏனென்றால், அவை தூரத்திலிருந்து தண்ணீர் குள் மிகவும் அமைதியுடன் வந்து நம்மளை தாக்கும். இதற்கான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ” ஒரு சிறிய குளத்தில் மூன்று சிறுவர்கள் வேடிக்கை பார்ப்பதையும், திடீரென்று நீர்யானை தோன்றுவதையும் இது காட்டுகிறது. ஆப்பிரிக்காவில் இந்த வீடியோ  கிளிப் பதிவிட்டு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறிய குளத்தில் சிறுவர்கள் நீந்திக் கொண்டு ஜாலியாக விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்தில் இருந்து அமைதியாக தண்ணீர் குள் இருந்து வெளிய  நீர் யானை ஒன்று வருகிறது. இதனை பார்த்த அந்த சிறுவர்கள் சத்தம் போட்டுக்கொண்டே அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் அனைவரும் குளத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் யாருக்கும் எந்த காயமும் படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்