25 ஆண்டுகளாக இருந்த பதவியை உதறித் தள்ளிய நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி..!
நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் 25 ஆண்டுகளாக தான் இருந்த சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி (Netflix) நிறுவனத்தின் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் நெட்ஃபிளிக்ஸ் தொடங்கியதில் இருந்தே சி.இ.ஓ பதவியில் இருந்து வந்துள்ளார். 1997-யில் தொடங்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக தான் இருந்த தலைமை நிர்வாகி (சி.இ.ஓ) பதவியிலிருந்து இன்று விலகியுள்ளார்.
பதவி விலகியதோடு அவருக்கு பதிலாக கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சராண்டாஸ் ஆகியோரை இணை தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்வார்கள் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நெட்ஃபிளிக்ஸிலிருந்து நான் முழுவதுமாக விலகவில்லை. நிறுவனத்தின் தலைவராக இருந்து கிரெக் மற்றும் டெட் ஆகியோருக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளார். மேலும் நெட்ஃபிளிக்ஸின் பங்குகள் மீது அதிக கவனம் செலுத்துவேன் என்றும் ரீட் ஹேஸ்டிங்ஸ் கூறினார்.