உணவு தேடி வயலுக்கு வந்த ஒட்டகம்! காலை வெட்டிய கொடூரம்…5 பேர் கைது!

பாகிஸ்தான் : கராச்சியில் சிந்து மாகாணத்தில் உணவு தேடி வயலில் அத்துமீறி நுழைந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய கொடூரமான சம்பவத்தில் வயலின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. கடந்த வார இறுதியில் சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் உள்ள ஒரு வயலுக்கு பசியோடு ஒட்டகம் ஒன்று வந்து அங்கு இருந்த உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த வயலில் உரிமையாளர் ஆத்திரம் அடைந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டகத்தின் இடது காலை அரிவாளால் பரிதாபம் கூட இல்லாமல் கொடுரமாக வெட்டினார்கள்.
அத்துடன் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உரிமையாளர் ருஸ்தும் ஷார் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்து கண்டிப்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வந்தனர்.
ஒட்டகத்தின் உரிமையாளரான விவசாயி சோமர் பெஹன் காவல்துறையில் புகார் செய்யவில்லை இருப்பினும் வீடியோ வைரலாக பரவிய நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர். வயலின் உரிமையாளர் அவரது ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்து அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டகத்தின் கால் குணமாகி வருவதாகவும், அதன் சிகிச்சையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க செவ்வாய்கிழமை எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025