தீ பிடித்து எரிந்த பேருந்து! 18 பேர் உடல் கருகி பலி..13 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையின் தோளில் நிறுத்தப்பட்டிருந்த வேனை மோதியதில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பேருந்து 35 முதல் 40 பேர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீ விபத்துக்குள்ளானது என்று மாவட்ட அதிகாரி கூறினார். டீசல் டிரம்ஸ் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மீது பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள காரணத்தால் இன்னும் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.