கைபர் பக்துன்க்வாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பன்னு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரரும் அவரது மகனும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த வீரரின் தலையை தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அந்த பகுதியில் உள்ள பலங்குடியினர் கொல்லப்பட்ட வீரனின் தலையானது பச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளதாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் இறந்தவர்களின் உடல்களை பன்னு நகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜானிகேல் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தினால் கைபர் பக்துன்க்வாவில் போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் அறிந்த பாகிஸ்தான் அதிகாரிகள், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…