பாகிஸ்தான் ராணுவ வீரரை கொன்று தலையை மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்.! தேடுதல் வேட்டை தீவிரம்.!

Default Image

கைபர் பக்துன்க்வாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியான கைபர் பக்துன்க்வாவில் உள்ள  பன்னு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரரும் அவரது மகனும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த வீரரின் தலையை தாக்குதல் நடத்தியவர்கள்  அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அந்த பகுதியில் உள்ள பலங்குடியினர் கொல்லப்பட்ட வீரனின் தலையானது பச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளதாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் இறந்தவர்களின் உடல்களை பன்னு நகரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜானிகேல் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தினால் கைபர் பக்துன்க்வாவில் போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் அறிந்த பாகிஸ்தான் அதிகாரிகள், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்