11 நாட்கள் தொடர்ந்து பறந்து கின்னஸ் சாதனை படைத்த பார்-டெயில் காட்விட் பறவை.
வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் உள்ளது. இந்த பறவை இனம், குளிர் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.
இந்த பறவை மற்ற பறவையினங்கள் போல, அடிக்கடி ஓய்வெடுக்காது, அதேபோல இது எப்போதாவது தான் தரையிறங்கும். அதே வேலை இது தரையிறங்கினாலும் தண்ணீர் இருக்கும் இடங்களில் தரையிறங்காது. ஏனென்றால் இதன் உடல் அமைப்பு தண்ணீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு இருப்பதில்லை. அதையும் மீறி தெரியாமல் கூட தண்ணீரில் விழுந்தால் பறவைக்கு இறப்பு தான் நேரிடும். இதனால் தான் இப்பறவை நீண்ட தூரம் நிற்காமலேயே பறக்கும்.
இந்த நிலையில்,234684 என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட், அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் உணவின்றி, ஓய்வின்றி 11 நாட்கள் தொடர்ந்து பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதே இனத்தை சேர்ந்த மற்றொரு பறவை கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்த நிலையில், அந்த சாதனையை தற்போது இப்பறவை முறியடித்துள்ளது. இரவு பகலாக பறவை பயணம் மேற்கொண்டதன் காரணமாக அதன் உடல் எடை பாதிக்கு மேல் குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…