இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..! 2000 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசாங்கம் அறிவிப்பு!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால் வரும் செப் -7 தேதி (திங்கள்கிழமை) வந்தால் ஒரு வருடம் நிறைவடைந்து விடும். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42, 000 உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவாக இரான் சமீபத்தில் களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதவராக மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு அமைப்புகளும் இஸ்ரேலை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இஸ்ரேலும் சற்றும் சலிக்காமல் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், போர் தீவிரமடைந்த நிலையில், போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கையில், இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய இஸ்ரேல் கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.