கறுப்பின பெண்ணை கீழே வீசியெறிந்த அமெரிக்க போலீஸ்… வெளியான வீடியோவால் பரபரப்பு.!
வீடியோ எடுத்த கறுப்பின பெண்ணை பலமாக கீழே தள்ளிவிட்ட அமெரிக்க போலீசாரின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் காவல்துறை அதிகாரி, ஒருவரைக் கைது செய்யும் போது அதனை வீடியோ பதிவு செய்த கறுப்பின பெண்ணை அந்த போலீஸ் வேகமாக கீழே தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கீழே தள்ளிவிட்ட பெண்ணின் மீது பேப்பர் ஸ்ப்ரே வையும் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது.
This is Lancaster, California.
A Los Angeles county sheriffs deputy throws a Black woman to the ground and brutalized her for filming them arresting her husband.
Filming the police is not illegal.
This is brutality.
Arrest this pig. pic.twitter.com/BKg9dnZX7M
— Bishop Talbert Swan (@TalbertSwan) July 4, 2023
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை தெரிவித்த தகவலின்படி, கடையில் திருடிய குற்றத்திற்காக போலீசார் அந்த நபரைக் கைது செய்யும் போது இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் இது குறித்து கூறிய லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி போலீஸ் ஷெரிப், பொதுமக்களிடம் கன்னியமுடன் நடக்கவேண்டும் என்றும் ,விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.