நடுவானில் தீப்பிடித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்..! அவசர அவசரமாக தரையிறக்கம்..!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் நடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதன் இயந்திரத்தில் பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:45 மணியளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் AA1958 போயிங் 737 விமானம், ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
American Airlines 737 returns to Columbus Airport after striking a number of geese on departure. AA1958 to Phoenix landed back safely 25 minutes after takeoff. pic.twitter.com/ws3wi3Cl9D
— Breaking Aviation News & Videos (@aviationbrk) April 23, 2023
இந்த விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தின் இன்ஜினில் பறவை ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீ ஏற்பட்டதை அறிந்த விமானிகள் விமானத்தை உடனே ஓஹியோவின் கொலம்பஸில் உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
American Airlines Boeing 737-800 (N972NN, built 2015) safely returned to land at Columbus-Intl AP (KCMH), OH after flames and smoke was seen coming from the right engine. Flight #AA1958 to Phoenix landed back on runway 28L 25 minutes after take-off. No one was hurt. @Cbus4Life… pic.twitter.com/YsAxsJ3D1O
— JACDEC (@JacdecNew) April 23, 2023
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.