சூடு பிடிக்கப்போகும் அமெரிக்க அமைச்சரவை! முக்கிய பொறுப்பில் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி…டிரம்ப் அதிரடி!

அமெரிக்க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பிற்கு எலான் மஸ்க்கையும், விவேக் ராமசாமியும் நியமிக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

trump - musk - vivek

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இதனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு தேர்தலுக்கு முன்பே அமைச்சரைவையில் பங்கு இருக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

முக்கிய பொறுப்பு :

அதன்படி, தற்போது அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை அமெரிக்க நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

செயல்திறன் துறை :

அமெரிக்க நாட்டை பொறுத்தவரையில், அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு துறையாகும். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் ஏற்கனவே தொழிலதிபர்களாக உள்ளனர்.

இதனால், பொருளாதாரத்தில் என்ன சிக்கல் வரும், அதனை எப்படி எதிர்கொள்வது, அமெரிக்காவின் வரும்கால திட்டங்கள், அந்த திட்டங்களை எப்படி கையாளுவது, அதற்கான நிதியை நிர்ணயிப்பது என இதுபோன்ற முக்கியப் பொறுப்பை கையாளுவதே இருவரின் பொறுப்பாக இருக்கும்.

அடிப்படியில் தொழிலதிபர்களாக உள்ள எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற கடுமையாக உழைத்தார்கள். குறிப்பாக எலான் மஸ்க் தேர்தலுக்கான நிதியுதவி செய்து உழைத்தார். அதே போல, விவேக் ராமசாமியும், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார். இதன் அடிப்படியில் தான் இந்த இருவருக்கும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பொறுப்பை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்