சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியாவில் நடைபெற்ற சின்சான்ஜி கிறிஸ்தவ சபையின் 115வது பட்டமளிப்பு விழாவில் 1,11,628 பேர் பட்டம் பெற்றனர்.

Shincheonji Christian Church

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை சபைகளை கொண்டு உலகளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது.

இச்சபையின் மூலம், மதத் தலைவர்களுக்கான 115வது பட்டமளிப்பு விழாவானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவானது முதலில் தென் கொரியாவில் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அந்நாட்டு பண மதிப்பீட்டில் சுமார் 1 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 58 கோடி) செலவு செய்யப்பட்டது. ஆனால், விழா நடைபெறும் முந்தைய நாள் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

விழா நடத்த அனுமதி கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளை முழுதாக செய்த பிறகு, இறுதி நேரத்தில் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாக மாறியது. இது மத ரீதியில் ஒருதலைப்பட்சமான முடிவு என சின்சான்ஜி சீயோன் கிறிஸ்தவ சபை அதிருப்தி தெரிவித்தது.

இறுதி நேரத்தில், சின்சான்ஜி சியோங்ஜு கிளை சபைக்கு பட்டமளிப்பு விழா மாற்றம் செய்யப்பட்டு, அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சீயோன் கிறிஸ்தவ சபையின் தலைவர் யங்-ஜின் டானும், ஆலயத்தின் தலைவர் மான்-ஹீ லீ அவர்களும், சின்சான்ஜி சியோங்ஜு கிளை சபையில் நடைபெற்ற 115வது பட்டமளிப்பு விழாவில் கலந்த கொண்டனர்.

இதில், சுமார் 10 ஆயிரம் தென் கொரிய பங்கேற்பாளர்கள் உட்பட 1,11,628 பேர் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெரும் 4வது மிக பெரிய பட்டமளிப்பு விழா இதுவாகும். இதற்கு முன்னர், 2019-ல் 1,03,764 பட்டதாரிகளும், 2022-ல் 1,06,186 பட்டதாரிகளும், 2023-ல் 1,08,084 பட்டதாரிகளும் பட்டம் பெற்றிருந்தனர்.

சின்சான்ஜி இயேசு சபையின் 115வது பட்டமளிப்பு விழாவில் தென் கொரியாவிற்கு வந்திறந்த பன்னாட்டு வெளிநாட்டு மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். (இச்செய்தியானது சின்சான்ஜி கிறிஸ்தவ சபை மூலம் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டது)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

jan live news
Welcome2025
Chhattisgarh Sakti 11th school student cut tongue
Ajith (Goog bad udly - Vidamuyarchi movie stills)
Happy New Year 2025
Happy New Year 2025
JawaharlalNehru ISSUE