பிரதமர் மோடிக்கு நன்றி… எஸ்சிஓ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின்.!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை(SCO) நடத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.
இன்று நடைபெற்ற 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக தலைமையேற்று நடத்தினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகம் சந்திக்கும் பிரச்சனைகளில் உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்றவைகளின் தேவைகள் தான் அதிகம் உள்ளது. மேலும் பிரதமர் மோடி, இந்த மாநாட்டில் இந்தியாவின் AI சார்ந்த மொழி இயங்குதளமான ‘பாஷிணி’ யை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த SCO மாநாட்டிற்காக, ரஷ்ய அதிபர் புதின் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதுகுறித்து கூறிய புதின், உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி, மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதுதான் எஸ்சிஓவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.