டெஸ்லா பங்குகள் சரிவு எதிரொலி.! உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு 8 லட்சம் கோடி சரிவு.!
டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் $100 பில்லியன் இழப்பு.
நவம்பர் 2020க்குப் பிறகு டெஸ்லா பங்குகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022ல் முதல்முறையாக 100 பில்லியன் டாலருக்கும்(ஏறத்தாழ 8லட்சத்து 17,000 கோடி) அதிகமாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மஸ்க்கின் சொத்துமதிப்பு $340 பில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022 இல் $101 பில்லியன் அல்லது 37% குறைந்து, ஒரு நாளைக்கு சுமார் ₹2,500 கோடியை இழந்துள்ளது. நவம்பர் 22, 2022 நிலவரப்படி அவரது மொத்த சொத்து $170 பில்லியன் ஆகும்.
அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் 321,000 க்கும் மேற்பட்ட டெஸ்லா வாகனங்களை, தொழிநுட்பக்கோளாறு காரணமாக திரும்பப் பெறுகிறது, காரின் பின்புற விளக்கு மற்றும் ஏர்பேக் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30,000 மாடல்-எக்ஸ்(Model-X) கார்களை நிறுவனம் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அதன் பங்குகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3% குறைந்தது.