இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா…எலான் மஸ்க் நச் பதில்.!!
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ” இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் டெஸ்டலா புதிய தொழிற்சாலைக்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்தார். இது பற்றி வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு நிகழ்வில் மஸ்க்கிடம் கேட்டபோது, “நிச்சயமாக” என்று கூறினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தித் ஆலையை நிறுவுவதற்கான அதன் திட்டங்களில் தீவிரமான யோசனையில் உள்ளது என்று தொழில்நுட்ப துணை அமைச்சர் கடந்த வாரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது எலான் மஸ்க் இந்த ஆண்டுக்குள் டெஸ்லா இந்தியாவில் வரும் என கூறியது பலரையும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மையில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் டிவிட்டரில் பின்தொடர்ந்திருந்தார். இதனை பார்த்த சில பயனர்கள் “மஸ்கின் டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.