பாகிஸ்தான் மசூதியை உடைத்து தகர்த்த பயங்கரவாதிகள்..! வெளியான வீடியோவால் பரபரப்பு..!
பாகிஸ்தானில் உள்ள அஹ்மதி மசூதியின் மினாராக்களை பயங்காரவாதிகள் உடைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள அஹ்மதி மசூதியின் ஒரு பகுதியான மினாராக்களை டி.எல்.பி (TLP) தீவிரவாதிகள் உடைத்தனர். பாகிஸ்தான், கராச்சியில் உள்ள அஹ்மதி மசூதியின் பிரார்த்தனைக்கு அழைக்கப்படும் கோபுரங்களை (மினாரெட்) தீவிரவாத குழுவில் ஒன்றான தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானைச் (TLP) சேர்ந்த ஒரு கும்பல், உடைக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 3 பேர் மசூதியின் கோபுரங்கள் மீது ஏறி மினாரெட்களை சுத்தியலை வைத்துத் தகர்க்கின்றனர். சில நிமிடத்தில் நான்காவதாக ஒரு நபர் மசூதி மீது ஏறி கோபுரங்களை உடைக்க முயன்றார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் கராச்சி காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கராச்சியில், இதே அஹ்மதியா மசூதியில் டி.எல்.பி (TLP) தீவிரவாதிகள் கோபுரங்களை (மினாரெட்) அழிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.
As we enter into the next month of 2023, TLP terrorists destroy minarets of an Ahmadi mosque in Karachi.
This is the same Ahmadiyya Hall where TLP terrorists came last year demanding to destroy minarets. @KarachiPolice_ Koi action lein gay Sir? pic.twitter.com/SX0VwfNbvG— Ali Raza (@shezanmango) February 2, 2023