பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!
பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும் பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர்
வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்களான கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளிவந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட ஒரு பயங்கரவாத கும்பல் ஒன்று காவல் நிலையத்தை மூன்று திசைகளில் சூழ்ந்து கொண்டு, காவல்நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அதன் பின் துப்பாக்கிச்சூடும் நடந்துள்ளது. மேலும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தாலிபான் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் தாக்குதலால் அங்கு வசிக்கின்ற மக்கள் எல்லாரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா பகுதி மற்றும் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.