பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி.!
Pakistan Army: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
READ MORE – உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. 20 பேர் பலி, 70 பேர் காயம்.!
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று தெரிவிக்கப்படாத நிலையில், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
READ MORE – CAA அமலாக்கம் கவலை அளிக்கிறது.. கருத்து கூறிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த இந்தியா!
இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடக பிரிவு (ISPR) கூறுகையில், பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை பாகிஸ்தான் தங்கிருந்த முகாம் மீது மோதி வெடிக்க செய்துள்ளனர்.
இதனால், அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், ஐந்து பாதுகாப்பு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு வீரர்கள் தாக்குதல் நடத்தியவர்களுடன் சண்டையிட்டு தூக்கிசூட்டில் பலியானதாக கூறப்படுகிறது.
READ MORE – உணவுக்காக காத்திருந்தபோது நேர்ந்த சோகம்.! காசா தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு.!
நீண்ட காலமாகவே, இப்பகுதி பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான், பாகிஸ்தான் (TTP), ஆப்கான் தலிபான், அல்-கொய்தா, ஹக்கானி வலைச்சமூகம் மற்றும் பல தீவிரவாத அமைப்புகளின் கோட்டையாக இருந்து வருகிறது.