பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

Pakistan Air Force base

பாகிஸ்தான்: பஞ்சாப் மாநிலம் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்தில் இன்று காலை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, பஞ்சாப் மாநிலம் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது பல தற்கொலை குண்டுதாரிகள் உட்பட பல ஆயுதமேந்திய ஜிஹாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் தற்போதும் வருவதாகவும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு.!

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-ஜிஹாத் (டிஜேபி) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் விமானப்படை தளம் மீதான தாக்குதலில் டஜன் கணக்கான சிறிய மற்றும் பெரிய விமானங்களை அழிக்கப்பட்டதாகவும், பல இராணுவ வீரர்கள் மற்றும் விமானிகள் கொல்லப்பட்டதாகவும் தெஹ்ரீக் ஜிஹாத் பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் முல்லா முகமது காசிம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் சுவர்களில் ஏணியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நுழைந்ததாக கூறப்படுகிறது. விமானப்படை தளத்தை தாக்கிய தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தியுள்ளதாகவும், அவர்கள் விமானப்படை தளத்தின் சுமார் இரண்டு வளாகங்களை தாக்கியதாகவும் பயங்கரவாத குழு தெஹ்ரிக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜேபி) கூறியுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல்  ராணுவம் கூறுகையில், பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது 6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அதில் தரையிறக்கப்பட்ட மூன்று விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் டேங்கரை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜேபி) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்