துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி.. 32 இலக்குகளை குறிவைத்து அழிப்பு.!

பதிலடி கொடுக்கும் விதமாக, குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இலக்குகள் மீது, வான்வழித் தாக்குதல் நடத்தியயதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Turkey Terror Attack

துருக்கி : தலைநகர் அங்காரா அருகே துருக்கியின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மும்பைத் தாக்குதல் சம்பவம் போல நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்த தகவலின்பேரில் விரைந்து வந்து 2 தீவிரவாதிகளை துருக்கி பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது.  இதனையடுத்து, இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இடங்கள் மீது, பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியயதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம், இந்த தாக்குதலின் பின்னணியில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) இருப்பதாக துருக்கி சந்தேகிக்கின்றது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என துருக்கி பாதுகாப்பு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல்

தலைநகர் அங்காராவில் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் நுழைந்து தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார். அதன்பிறகு, மற்ற தாக்குதல்காரர்களும் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த முழு சம்பவத்தின் போது, ​​ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச்சூடு நடந்தது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் கறுப்பு நிற உடை அணிந்திருந்த படி, கையில் துப்பாக்கி மற்றும் பையை வைத்திருப்பது தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்