அமெரிக்காவின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். புளோரிடாவின் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். வழக்கம் போல அனைவரும் அந்த பகுதியில் தங்களுடைய வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் நுழைந்த வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார்.
பிறகு திடீரென அவர் தனது கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கறுப்பினத்தவர்களை சுட தொடங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து கடையில் இருந்த மற்றவர்களும் பதட்டத்தில் கூச்சலிட்டனர். இந்த மோசமான துப்பாக்கிசூட்டில் தாக்குதலில் 3 கறுப்பினத்தவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்ய முயன்றார்கள். இதனை கவனித்த வெள்ளை இனத்தவர் தனது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின் காவல்துறையினர் அவருடைய துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் எழுதப்பட்டிருந்த இனவெறி வசனங்களை வைத்து இது இனவெறி காரணமாக நடந்த தாக்குதல் என கண்டுபிடித்தனர். அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…