உக்ரைன் நாட்டுப் பகுதிகள் நாளை ரஷ்யாவுடன் இணைப்பு.! புதின் அதிரடி நடவடிக்கை.!
உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பகுதிகள் நாளை அதிகாரபூர்வமாக ரஷ்யா வசம் செல்வதற்கான நிகழ்ச்சி நாளை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் அதற்கான அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திட உள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய 4 பகுதிகளை ரஷ்யா தன்வசமாக்க உள்ளது.
இது சம்பந்தமான உறுதியான அறிக்கையில் நாளை ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட உள்ளார். இந்த அரசு நிகழ்ச்சி ரஷ்யாவின் முக்கிய நகரான கெம்ளினில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக நாளை இணைக்கப்பட உள்ள உக்ரைன் நாட்டு பகுதிகளில் அங்குள்ள பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டி நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.