EarthQuake [Image Source : PTI]
பசிபிக் பெருங்கடலில் லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
மேலும், நியூ கலிடோனியாவின் நௌமியாவிலிருந்து 415 கிமீ கிழக்கே உள்ள லாயல்டி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது. தற்பொழுது, சுனாமி குறித்த எச்சரிக்கை குறித்த எந்த தகவலும் வெளியாக வில்லை.
மேலும், இந்த மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 3 வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், நியூ கலிடோனியாவின் கிழக்கே 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…