ஈக்வடார் நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈக்வடார் நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 6.8 பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,தற்போது பலி எண்ணிக்கை 14-ஆகி உயர்ந்துள்ளது.
மேலும். இந்த நிலநடுக்கத்தால் 44 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 90 வீடுகள், 50 கல்வி கட்டிடங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஈக்வடார் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
மேலும், இதைப்போல இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 55,000-க்கும அதிகமானோர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…