சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப்பதிவு.!
சிலி நாட்டின் மத்திய அக்கடற்கரை பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆகப்பதிவாகியுள்ளது.
மத்திய சிலியின் கடற்கரை பகுதிகளில் 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு மேல் இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அட்டகாமா பாலைவனத்தின் மேற்கில், வடக்கு சிலியில் உள்ள ஒரு கடலோர நகரம் இக்விக் ஆகும், இங்கு 204 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்தது.