ரெட் சீ பகுதியில் பயங்கர தாக்குதல் ! பஞ்சாப் வந்த வணிக கப்பலை தாக்கிய ஹவுதி படையினர் !!

Ship Attack

Ship attack By Houthis : இந்தியாவை நோக்கி வந்த கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பலை ஹவுதி படை தாக்கி உள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் இஸ்ரேல்–காசா போர் என தொடர்ந்து ஒரு சில மாத காலமாக போர் பதற்றம் மிகுந்த அளவில் நிலவி வருகிறது. மேலும், காசா நாட்டின் மீதான இஸ்ரேலின் போருக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக நிறுத்த கோரியும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்மறையாக காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன நாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் ஹவுதி படை இயங்கி வருகிறது. இவர்கள் கடல் வழியே செல்லும் சில கப்பல்களை குறிவைத்துத் தாக்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த ஹவுதி படை மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய் கப்பல் மீது ரெட் சீ (Red Sea) பகுதியில் இந்த மோசமான தாக்குதலை ஹவுதி படை நடத்தியுள்ளது. இந்த கப்பல் முன்னதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்ததாகவும் அதன் பிறகு கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒருவரிடம் விற்று விட்டதாகவும் ஹவுதி செய்தி தொடர்பாளரான யாஹ்யா சாரியா தெரிவித்து இருந்தார். மேலும், இந்த கப்பல் தற்போது ரஷிய நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷிய நாட்டின் ப்ரிமோர்ஸ்கில் இருந்து புறப்பட இந்த டேங்கர் கப்பலானது இந்தியாவில் குஜராத்தில் இருக்கும் வாடினருக்கு வந்து கொண்டிருக்கும் போது தான் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. மேலும், இந்த கப்பல் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமனில் உள்ள ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் எந்த அளவுக்கு இந்த கப்பல் சேதமடைந்துள்ளது எனவும், கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது எனவும் எந்த தகவலும் அதிகாரப்ப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்