காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் – மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் காஸாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் அகதிகளாக காஸா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கத்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டது.
சீனாவில் அடுத்த கொரோனா பாதிப்பா.? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் சுவாச நோய்.!
மேலும் இந்த போர் நிறுத்தத்தின் போது, இருதரப்பிலும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இருதரப்பினரும் பிணைக்கைதிகளை விடுவித்தனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இந்த 4 நாட்களும் காஸாவில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கத்தார் மற்றும் எகிப்து தரப்பில், மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசா மற்றும் இஸ்ரேல் மக்களிடையே நிரந்தரமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.