டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது.! 20 ஆண்டுகள் சிறை?
ரஷ்யா : பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார்.
செய்தி பரிமாற்ற செயலியான ‘டெலிகிராம்’-யை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நோக்கி பிரைவேட் ஜெட்டில் பயணித்த அவரை பாரிஸ் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
அவர் மீது, தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை டெலிகிராம் தளம் வழியே தடையின்றி அனுமதித்ததாகவும், பிரான்ஸ் சட்டத்திற்கு ஒத்துழைக்காதது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டெலிகிராமில் மதிப்பீட்டாளர்கள் பற்றாக்குறையால், இவ்வாறான குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில், பவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது. அதன்படி, அவர்க்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.