பிரிட்டன் விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு..! நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு.!

Air traffic

பிரிட்டனில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய விமானப் போக்குவரத்து சேவை (NATS) தெரிவித்துள்ளது.

மேலும், பொறியாளர்கள் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கோளாறைச் சரிசெய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்றும் இந்த சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றும் தெரிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்