வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி – நைஜீரியாவில் 147 பேர் உயிரிழந்த சோகம்!

டேங்கர் லாரியில் இருந்த கசிந்த எரிபொருளை பாத்திரங்களில் பிடிக்க மக்கள் கூடிய சமயத்தில் எதிர்பாராத விதமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

petrol tanker explodes in Jigawa

நைஜீரியா : ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

டவுராவின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கானோ-ஹடேஜியா விரைவுச் சாலையில் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள அகாயி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது.

அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கசிந்த எரிபொருளை பாத்திரங்கள் மற்றும் வாளிகளில் பிடிக்க மக்கள் கூடிய சமயத்தில் எதிர்பாராத விதமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது, சம்பவ இடத்திலையே குறைந்தது 50 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என்று நைஜர் மாநில அவசரநிலை மேலாண்மை முகமையின் இயக்குநர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை இரவு நிகழ்ந்ததாகவும், நேற்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 வரை டேங்கர் லாரி எரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துக்குள்ளான டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்