மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்… கல்லால் அடித்து கொல்லும் தண்டனை அமல்!

Afghan women

Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றினர்.

இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவும் வகையில் உள்ளது. ஏனென்றால், தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதில், குறிப்பாக பெண்களுக்கு போடும் உத்தரவுகள் அதிகமாகும். இது ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கொடுமையானதாக உள்ளது.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்கும் போது இஸ்லாமிய ஷரியா சட்டபடி, பெண் கல்வி, பெண் சுதந்திரம், உலக நாடுகளுடன் நட்புறவு என அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தாலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆனால் அப்படி நடைபெறவில்லை, அதற்கு மாறாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பெண்களுக்கான இருந்த ஒரு கொடூர தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தாலிபான் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், திருமணத்தை மீறி விபச்சாரம், கள்ள தொடர் உள்ளிட்ட முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அங்கு பெண்களின் நிலை மிக மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வரும் என்ற தாலிபான் அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், தலிபான்களின் அறிவிப்புக்கு சர்வதேச மகளிர் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்