சிரியா இடிபாடு – இறந்த தாயின் அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் குழந்தை மீட்பு..! வீடியோ உள்ளே..!
சிரியா இடிபாடுகளை இடையே தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு.
சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், அங்கு பல அடுக்குமாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில், இதயத்தை ரணமாக்கக் கூடிய ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை ஒன்று இடிந்து விட்டதாகவும், இதில் நோயாளிகள் பல சிக்கியிருப்பதாகவும் மீட்பு குழுவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நவீன கருவிகள் மூலம் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் ரத்தம் சொட்டுவதை கண்ட நிலையில், அங்கு யாராவது இருக்கிறார்களா என்று மீட்பு குழுவினர் பார்த்தனர்.
அதில் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார் அவரது அருகில் பச்சிளம் குழந்தையின் சத்தம் கேட்டுள்ளது. அந்த குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்த நிலையில், தாயோடு இணைந்தே இருந்துள்ளது.
இதனை கண்ட மீட்பு குழுவினர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், பின் பச்சிளம் குழந்தையை கைகளில் அணைத்த படியே வெளியே மீட்டு வந்தனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த காட்சி இணையத்தில் வெளியான நிலையில் பலரது இதயத்தையும் ரணமாக்கியுள்ளது.
A mother in Syria gave birth to her baby before she was dead. #earthquake pic.twitter.com/HVUEqEBLRu
— Muhammad Smiry ???????? (@MuhammadSmiry) February 7, 2023