சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

துருக்கி ஆதரவு குழுக்களுடன் குர்திஷ் படைகள் சண்டையிட்டு வரும் வடக்கு சிரிய நகரமான மன்பிஜில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

car bomb explosion

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த வேனில் சென்ற 15 விவசாயிகள் உடல் சிதறி பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள மன்பிஜில் நடந்த இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. மேலும், இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தர்களில் பெண்களும் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

இவர்களைத் தவிர, 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி பஷார் அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜில் வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் மன்பிஜில் நடந்த ஏழாவது கார் குண்டுவெடிப்பு இதுவாகும்.

துருக்கிய ஆதரவு பெற்ற சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் பிரிவுகளுக்கும், அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் தலைமையிலான சிரிய படைகளுக்கும் இடையே சண்டை நடந்த பகுதியில், ஒரு மாதத்திற்குள் நடந்த ஏழாவது கார் குண்டுவெடிப்புச் சம்பவமும் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்