இனி அந்த விஷயத்திற்கு சிட்னி இல்ல.? விக்டோரியா தான் டாப்…
ஆஸ்திரேலிய நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற அந்தஸ்தை இழந்தது சிட்னி
சிட்னி அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். தற்போது, சிட்னி ஆஸ்திரேலிய நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.
இப்போது, அந்த அந்தஸ்தை மெல்பேர்ண் நகரம் பெற்றுருக்கிறது, மெல்பேர்ண் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 18,700 பேர் கூடுதலாக சுமார் 48 லட்சம் மக்கள் தொகையுடன் மெல்பேர்ண் நகரம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, மெல்போர்ன் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தது, காரணம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கு குடியேறியவர்களின் வருகை அதிகமாக இருந்தது. இருப்பினும், 1905 ஆம் ஆண்டில், சிட்னி கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.