ஆராய்ச்சி ராக்கெட்டை ஏவிய ஸ்வீடன்..! நார்வேயைத் தாக்கியதால் பரபரப்பு..!

Default Image

ஸ்வீடனில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆராய்ச்சி ராக்கெட் செயலிழந்து அண்டை நாடான நார்வேக்குள் விழுந்துள்ளது.

வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 24ம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் (எஸ்எஸ்சி) மூலம் ஒரு ஆராய்ச்சி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த ஆராய்ச்சி ராக்கெட் செயலிழந்து அண்டை நாடான நார்வேக்குள் விழுந்துள்ளது. இந்த ராக்கெட் 250 கிமீ உயரத்தை எட்டியவுடன் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் ராக்கெட் செயலிழந்து நார்வேக்குள் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் விழுந்துள்ளது. இதுகுறித்து  எஸ்எஸ்சி தகவல் தொடர்புத் தலைவர் பிலிப் ஓல்சன் கூறுகையில், இந்த ராக்கெட் அருகிலுள்ள குடியேற்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், 1,000 மீட்டர் உயரத்தில் மலைகளில் தரையிறங்கியது என்று தெரிவித்தார்.

மேலும், நாங்கள் ஸ்வீடிஷ் மற்றும் நோர்வே அரசாங்கங்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். பேலோடை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று பிலிப் ஓல்சன் கூறியுள்ளார். ராக்கெட் விபத்தால் சுற்றுப்புற பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. ஸ்வீடிஷ் ஸ்பேஸ் கார்ப்பரேஷனின் செய்திக்குறிப்பில் இருந்து இந்த விபத்து குறித்து அறிந்ததாக நார்வேயின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்